Saturday, January 16, 2010

முறுக்கின் முன்கதை

ஏதாவது புதிய பதார்த்தம் செய்யும்போதெல்லாம் எங்க வீட்டு ரெண்டு கால் எலி:)யின் பாடுதான் திண்டாட்டமா இருக்கும்..ஏன்னா, எக்ஸ்பெரிமென்ட் பண்ணுறது மட்டும்தானே நம்ம வேலை? அதை குடுத்து, ரிசல்ட் எப்படியிருக்குன்னு பார்க்கத்தான் இங்கே ஒரு ஆள் இருக்காரே, அப்புறம் நம்ம எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்??! :)

இந்த முறை முறுக்குக்கு மாவு பிசைந்து வைத்திருந்தேன்..பச்சை மிளகாய் அரைத்துப் போட்டதால் முறுக்கு மாவு கொஞ்சம் வித்யாசமான:) பச்சை நிறத்தில் இருந்தது..அன்றைக்கு இவரும் வொர்கிங் ப்ரம் ஹோம்.

ஊர்ல
கிச்சன் வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும், இவங்கள்லாம் அங்கே எட்டிக் கூட பாக்க மாட்டாங்க..ஆனா இங்கே ஹாலும் கிச்சனும் சேர்ந்தே தானே இருக்கு? எலிக்கு மூக்கு வேர்த்து, ஆர்வமாக கிச்சனுக்கு வந்தது.
பிசைந்து வைத்திருந்த முறுக்கு மாவைப் பாத்து கொஞ்சம் ஜெர்க்காகி நின்று விட்டது!! இந்த வாரம் தான் மேக்ஸ்- அவதார் வேற பார்த்துட்டு வந்திருந்தோம்..அந்தப் படத்தில வரும் "Pandora'' என்ற கிரகத்தின் தாக்கத்துல இருந்து எலி விடுபடவில்லை..அதனால் மாவைப் பார்த்ததும், சில வினாடிகள்- கேள்வி.. 'ஹையா..பண்டோரா முறுக்கு சுடப் போறியா?'-ன்னு!!

எனக்கு என்ன பதில் சொல்லறதுன்னு தெரில..அவரும் பதில எதிர்பார்த்த மாதிரியும் தெரில..திருப்பியும் ஹாலுக்குப் போயி வேலையைத் தொடர ஆரம்பிச்சிட்டார்..அதுக்கப்புறம் முறுக்கெல்லாம் சுட்டு முடிச்சு, டெஸ்ட் பண்ண, சாரி, டேஸ்ட் பண்ண கொண்டு போய்க் கொடுத்தேன்.

பண்டோரா முறுக்கு சூப்பரா இருக்கு!-ன்னு சொல்லிட்டே சாப்ட்டாரு...ஒரொரு பிரெண்ட் வீட்டுக்கும் குடுக்கும்போதும், என் வைப் பண்டோரா முறுக்கு செஞ்சிருக்காங்க..சாப்பிட்டுப் பாருங்கன்னு தான் இன்ட்ரோ குடுத்துட்டு இருந்தாரு..நேத்து ஒரு நண்பர் வீட்டுல பொங்கல் ஸ்பெஷல் பாட்லக்..அங்கேயும் எல்லார் கிட்டவும் இதே பாட்டு..எங்க நார்த் இண்டியா நண்பர்கள் முதற்கொண்டு அனைவரும் ரசித்து சாப்பிட்டாங்க.. முறுக்கு முழுவதும் காலி !

முறுக்கோட டேஸ்டுக்கு முன்னால பேர் முக்கியமா என்ன? நீங்களே சொல்லுங்க?? :) :) :)

1 comment:

  1. :))) பண்டோரா பாத்தாச்சா? எப்படியிருந்துச்சு?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails