Thursday, January 28, 2010

போண்டா



தேவையான பொருட்கள்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை -சிறிதளவு.
இஞ்சி - 1 இன்ச் துண்டு
சீரகம் - 3/4 ஸ்பூன்
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
பஜ்ஜி மாவு - 1 கப்
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு.



செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.



மசாலாவை மூணு நிமிடம் மிதமான தீயில் வதக்கி கொத்துமலை இலை, சர்க்கரை தூவி இறக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.




பஜ்ஜி மாவில் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.



கிழங்கு உருண்டைகளை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


சூடான போண்டா ரெடி!



தேங்காய் சட்னி அல்லது டொமாட்டோ கெச்சப்புடன் பரிமாறுங்கள்.



குறிப்பு
  • பஜ்ஜி மாவு இல்லையென்றால் ஒரு கப் கடலை மாவு + காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள் + கால்ஸ்பூன் பெருங்காயத்தூள் + அரை ஸ்பூன் சீரகத்தூள் + இரண்டு சிட்டிகை ஆப்பசோடா + உப்புசேர்த்து தேவையான நீர் விட்டு கரைத்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பின்னர் மீண்டும்கட்டியில்லாமல் கரைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.
  • ப்ளெய்ன் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு பதிலாக, கிழங்குடன் பொடியாக நறுக்கி வேக வைத்த கேரட்,பீன்ஸ், பட்டாணி இவற்றையும் சேர்த்து வெஜிடபிள் போண்டாவாகவும் செய்யலாம்.
  • மசாலாவில் இறுதியாக அரை ஸ்பூன் கரம் மசாலா தூவி, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் போண்டா வழக்கத்தை விட மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

8 comments:

  1. அய்! போண்டா. அதுவும் ஸ்மைலி போண்டா. :-) சூபர்ப் மகி. ;)

    ReplyDelete
  2. பார்க்கும் போதே சாபிடனும் போல இருக்கு மஹி. :)

    ReplyDelete
  3. இமா சொல்லித் தான் நானும் ஸ்மைலி பாத்தேன் :)

    ReplyDelete
  4. நான் போட்ட ஸ்மைலி-ய கண்டுபிடித்துப் பாராட்டியதுக்கு நன்றி இமா! என் கணவரைத் தவிர யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்கன்னு நினைச்சேன். நன்றி!

    தொடர்ந்து வந்து பின்னூட்டம் தரும் சாரு-விற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

    இப்படி சொல்லிட்டெல்லாம் இருக்கக் கூடாது, எடுத்து சாப்பிடுங்க தர்ஷினி !

    //இமா சொல்லித் தான் நானும் ஸ்மைலி பாத்தேன் :)// நாங்கல்லாம் போண்டா-ல கலைவண்ணம் கண்டவங்க.நீங்க.... வேணாம், நான் சொல்லல! ஹி,ஹி!!!

    ReplyDelete
  5. நாங்கலெல்லாம் போண்டா தின்றதுல கலை வண்ணம் காட்டறவங்க :)

    ReplyDelete
  6. மஹி குழந்தைகளை சாப்பிட வைக்க நல்ல யோசனை.ஸ்மைலி போண்டா நல்ல டேஸ்டிப்பா.

    ReplyDelete
  7. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி விஜி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails