Tuesday, February 23, 2010

ஸ்டஃப்ட் குடைமிளகாய்


தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - 3
ஏதாவது ஒரு பொரியல்/திக்கான கிரேவி - 2கப்
பிரெஞ்ச் பிரைட் ஆனியன்ஸ் - 1/2கப்
எண்ணெய் - 1ஸ்பூன்

செய்முறை
குடைமிளகாயின் காம்புப்பகுதியில் வட்டமாக நறுக்கி, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிடவும்.

மிளகாயின் பாதியளவு கிரேவியை வைத்து, அதன் மீது கொஞ்சம் பிரெஞ்ச் பிரைட் ஆனியன்ஸ்-ஐ கைகளால் நொறுக்கி தூவவும்.

மீண்டும் கிரேவியை வைத்து மிளகாயை நிறைத்து இன்னும் கொஞ்சம் ஆனியன்ஸ்-ஐ நொறுக்கி தூவி, நறுக்கி வைத்த மிளகாயின் காம்பு பகுதியை வைத்து மூடி விடவும்.

மிளகாய்களின் மீது பட்டர் அல்லது எண்ணெயை நன்றாகப் பூசி 350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் பேக் செய்யவும். 20நிமிடங்கள் கழித்து மிளகாய்களை எடுத்து திருப்பி அடுக்கி மேலும் 25 நிமிடம் பேக் செய்யவும்.

சுவையான ஸ்டஃப்ட் குடைமிளகாய் ரெடி..பரிமாறும்போது கூர்மையான கத்தியால் பெரிய துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும். இது சப்பாத்தி, சாதம் இரண்டுக்குமே பொருத்தமாய் இருக்கும்.




குறிப்பு
உங்களுக்கு விருப்பமான ஸ்டஃபிங்-ஐ குடைமிளகாயில் நிரப்பிக்கொள்ளலாம்..பொரியல் அல்லது கிரேவி எதுவானாலும் தண்ணீர் இல்லாமல் திக்காக இருக்க வேண்டும். இங்கே நான் ஸ்டஃப் செய்திருப்பது ராஜ்மா-உருளைக் கிழங்கு சேர்த்து செய்த கிரேவி.

மிளகாயின் உள்ளிருந்து எடுக்கும் விதைப் பகுதி மற்றும் சதைப்பகுதிகளையும் வீணாக்காமல் கிரேவி செய்யும்போது அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரைட் ஆனியன்ஸ் இல்லையெனில் பச்சை வெங்காயத்தையே பொடியாக நறுக்கி உபயோக்கிக்கலாம். அவன் இல்லாதவர்கள் ஒரு பானில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய்களை அடுக்கி மூடி போட்டு வேகவைக்கலாம்.

5 comments:

  1. மஹி உங்கள் குறிப்புகள் அனைத்துமே அசத்தல்

    ReplyDelete
  2. மஹி ரொம்ப நல்லா இருக்கு நானும் எப்பாவது செய்வேன், இதில் நான் வேகவைத்த காய்கறிகள், கொஞ்சம் வேக்வைத்த சாதம் வைத்து ஸ்டப் செய்வேன். அவனில் வைத்து செய்தாலே தனி சுவை தான் மஹி. அடுத்த தடவை இதே போல் செய்கிறேன். நிங்க எந்த கடையில் ப்ரென்ஞ் ப்ரைட் ஆனியன் வாங்கினிங்க. நானும் அடுத்த தடவை இதே போல் செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
  3. மஹி.. நல்ல ஐடியாவா இருக்கே..என்னால செய்ய முடியற மாதிரியும் இருக்கு.. பாக்கறேன்..

    ReplyDelete
  4. Viji,i bought it from Walmart..Its available in canned Vegetable section.

    Thanks Vanathy,taj,viji & chandhanaa!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails