Monday, March 8, 2010

காரா பூந்தி



தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1கப்
பேக்கிங் சோடா - 2சிட்டிகை
மஞ்சள் கலர் - 7 துளி
தண்ணீர் - 140ml
கறிவேப்பிலை
முந்திரி - 10
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4ஸ்பூன்
உப்பு

செய்முறை
கடலை மாவுடன் பேக்கிங் சோடா கலந்து, தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். மஞ்சள் கலரையும் மாவுடன் கலந்துகொள்ளவும்.

மிதமான சூட்டில் எண்ணெய் காய வைத்து பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி பொரித்தெடுக்கவும்.
இறுதியாக கறிவேப்பிலைகளையும்,முந்திரியை
யும் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

பொரித்து வைத்த பூந்தியுடன் மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள்,உப்பு, பொரித்த கறிவேப்பிலை,முந்திரி சேர்த்து நன்றாக கலக்கவும்.

காரசாரமான மொறு-மொறு காரா பூந்தி ரெடி!


5 comments:

  1. பார்க்க அழகா இருக்கு. செய்து பார்த்துட்டு திரும்ப வந்து பின்னூட்டம் போடுறேன்.

    ReplyDelete
  2. நான் உங்க உலகத்துல உலவரேன்..நீங்க என் கிச்சன்ல இருக்கீங்க..அடடா..என்ன பொருத்தம்??:D :D
    செஞ்சு பாத்து சொல்லுங்க இமா..நன்றி!

    ReplyDelete
  3. சூப்பர் காராபூந்தி சனி கிழமை செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றிங்க பிரபா & சாரு!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails