Thursday, September 1, 2011

கத்தரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய்(egg plant)-1
வெங்காயம்(சிறியது)-1
தக்காளி(சிறியது)-1
புளி- சிறிய கொட்டைப்பாக்கு அளவு
பூண்டு-4பல்
வரமிளகாய்-7 (காரத்துக்கேற்ப)
கடலைப்பருப்பு-11/2டேபிள்ஸ்பூன்
தனியா-1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

தாளிக்க
கடுகு-1/2டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-1கொத்து
எண்னெய்-1டீஸ்பூன்


செய்முறை

கத்தரி,வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவத்து கடலைப்பருப்பை போட்டு சிவக்க விடவும். தனியா சேர்க்கவும். தனியா வெடித்தவுடன் வெங்காயம்,பூண்டு, வரமிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கவும். பின்னர் தக்காளி, புளி சேர்த்து தக்காளி குழையும்வரை வதக்கவும்.

நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

கத்தரிக்காய் நன்றாக வெந்து நிறம்மாறும்வரை வதக்கி ஆறவைக்கவும்.

ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைத்தெடுக்கவும். தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு-உ.பருப்பு-கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

காரசாரமான கத்தரிக்காய் சட்னி ரெடி. இட்லி,தோசை,சப்பாத்தி, கலந்த சாதம் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.


18 comments:

  1. கத்தரிக்காய் சட்னி நானும் இதுபோலத்தான் பண்ணுவேன். நல்ல ருசியான குறிப்புக்கு நன்றி

    ReplyDelete
  2. ஹாய் மகி !!! எப்படி இருக்கீங்க
    தோசா.இட்லிக்கு புது சைட் டிஷ் .ரெசிபிக்கு நன்றி

    ReplyDelete
  3. கத்திரிக்காய் சட்னி இப்ப தான் கேள்வி படறேன்... செஞ்சி தர சொல்லி சாப்பிட்டுபாக்கணும் ...ரெசிபுக்கு நன்றி

    ReplyDelete
  4. கத்தரிக்காயில் சட்னி..புதிய முயற்சிதான்.செய்து பார்த்து விடுவொம்ம்.வான்ஸ் நோட்டட்....

    ReplyDelete
  5. Mahi, vidhaigalum theriyamal arayuma? katharikai kandu odubavargalai ariyamal saapida vaikum pola iruke!

    ReplyDelete
  6. nicely done.my mom makes a similar one.

    ReplyDelete
  7. மகி, நானும் இதே மாதிரிதான் செய்வேன்.இதுலே கொஞ்சம் மல்லியோ அல்லது புதினாவோ சேர்த்து செய்தால் அதிக மணமாகவும்,சுவையாகவும் இருக்கும்.

    ReplyDelete
  8. Nice variation, Mahi. We do it in a different way, like gojju.

    ReplyDelete
  9. ரொம்ப ஈஸியாக இருக்கின்றது...கண்டிப்பக செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்...

    ReplyDelete
  10. நாவில் எச்சில் ஊற வைக்கும், கத்தரிக்காய் சட்னி பற்றிய கலக்கலான ரெசிப்பி..விளக்கப் பகிர்விற்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  11. ஆசையா இருக்கு. ஹும்! இப்ப முடியாது. கொஞ்ச நாள் ஆகட்டும்.

    ReplyDelete
  12. மஹி..உங்களுக்கு மஞ்சள் கலர் ஃபிரைபேன் கிடைக்கலையா...? !!! :-))

    ReplyDelete
  13. உடனே ஈஸியா டேஸ்டா செய்யக் கூடிய என்னோட ஃபேவரைட் ஐட்டம் இது .:-))

    ReplyDelete
  14. //மஹி..உங்களுக்கு மஞ்சள் கலர் ஃபிரைபேன் கிடைக்கலையா...?// கிடைக்கலயா??????? ;))))

    ReplyDelete
  15. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... பெரிய கத்தரிக்காயில சட்னி.... சூப்பர்.. கத்தரிக்காய்க்கே இங்கின சனம் இப்பூடி அடிபடுகினமே.. கடவுளே:))....

    மகி கெதியா வாங்க.:))))))))))

    ReplyDelete
  16. Running out of time for browsing! ;)

    THANKS ALL for your lovely coments! :)

    ReplyDelete
  17. சும்மா உங்க ஸ்பேஸ எட்டி எட்டிப் பார்க்காமல் உற்றார் உறவினர் இனபந்துக்களோட சந்தோஷமாக இருந்துட்டு வரணும். அதான் ஃபர்ஸ்ட்டு.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails