Sunday, August 12, 2012

பேப்பர் க்ராஃப்ட்ஸ் - பகுதி 3: பூக்கூடை

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! :) "ஆகஸ்ட் 15 வர இன்னும் சிலநாட்கள் இருக்கே, இப்பவே என்ன அவசரம்??" என்று புருவம் தூக்கும் ஆட்கள், வேகமா ஸ்க்ரோல் பண்ணி பூக்கூடை வீடியோவைத் தாவிக் குதிச்சுப் பாருங்க. இல்லன்னா நிதானமா படிச்சுட்டு அங்க போங்க... :))))

தேவையான பொருட்கள்

ப்ரவுன் நிற முக்கோணங்கள் -99
ரோஸ் நிற முக்கோணங்கள் -40
வயலட் நிற முக்கோணங்கள்-60
மொத்த முக்கோணங்கள் - 199

கைப்பிடியின் நீளத்துக்கேற்ப முக்கோணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம், அதனால் ஒரு 25-50 முக்கோணங்கள் அதிகமாக தயாராக வைத்துக்கொள்ளவும்.

செய்முறை
18 ப்ரவுன் நிற முக்கோணங்களை மூன்று வரிசைகளில் இணைக்கவும்.

இணைத்த வட்டத்தை தலைகீழாகத் திருப்பிவைத்து ஒரு ப்ரவுன் முக்கோணத்தை எடுத்துவிட்டு, பிங்க் கலர் முக்கோணத்தை சொருகவும்.

பிங்க் முக்கோணம் தலைகீழாக (inverted) இணைக்கப்படவேண்டும்
. படத்தைப் பார்த்தால் புரியும்.

இப்பொழுது பிங்க் முக்கோணத்தின் மீது 2 பிங்க் முக்கோணங்கள், அதன் மீது ஒரு பிங்க் முக்கோணம் என இணைக்கவும்.

ப்ரவுன் வரிசையில் முதல் பிங்க் முக்கோணம் இணைத்ததில் இருந்து 2 ப்ரவுன் முக்கோணங்களை எடுத்துவிட்டு அடுத்த பிங்க் முக்கோணத்தை செருகவும். அதன் மீது மீண்டும் 2, 1 என்ற வரிசையில் பிங்க் முக்கோணங்களை இணைக்கவும். இதேபோல ப்ரவுன் வரிசையில் 2 விட்டு ஒரு பிங்க் என தொடர்ந்து இணைத்து முடிக்கவும்.

ஆகமொத்தம் 6 ப்ரவுன் முக்கோணங்களை நீக்கிவிட்டு, 6 பிங்க் முக்கோணடிசைன்கள் கிடைத்திருக்கும்.

இப்பொழுது, 6 பிங்க் முக்கோணங்களில் மூன்றை மட்டும் நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வயலட் நிற முக்கோணங்களை செருகிவிடவும். ஆல்டர்னேட்டிவ் ஆக இரண்டு நிறங்களும் கிடைக்கும். [ டைரக்ட்டாகவே பிங்க், வயலட் என மாற்றி மாற்றி இணைக்கலாம், ஆனால் (எனக்கு) குழப்பம் கொஞ்சம் கம்மியாக;) இருக்க வேண்டி இப்படி செய்திருக்கிறேன். :)]

இப்பொழுது மூன்று வயலட் பகுதிகள் மீதும் 7 ப்ரவுன் முக்கோணங்களை படத்தில் உள்ளவாறு இணைக்கவும்.

அடுத்து, 3 பிங்க் நிற பகுதிகள் மீதும் 5 வயலட் நிற முக்கோணங்களை படத்திலுள்ளவாறு இணைக்கவும்.

பூக்கூடை தயாராகிவிட்டது. கூடையின் கடைசி வரிகளை அழுத்தினால் இப்படி உயரமாகும்.

மேலேயுள்ள இதழ்ப் பகுதிகளை லேசாக அழுத்தி, கூடையை அகலப்படுத்தி விடவும்.

அடுத்ததாக கைப்பிடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். 2 ப்ரவுன்-1 வயலட்-2 ப்ரவுன்-1 வயலட்-2 பிங்க்-1 ப்ரவுன் -2 பிங்க் -1 ப்ரவுன் = மொத்தம் 12 முக்கோணங்களை படத்தில் உள்ளவாறு இணைக்கவும். இது கைப்பிடியின் ஒரு பகுதி, இதே போல ஐந்து அல்லது ஏழு தொகுப்புகள் (விரும்பிய நீளத்துக்கு ஏற்றபடி) இணைத்துக் கொள்ளவும்.

ஏழு கைப்பிடித் தொகுப்புகளையும் இணைக்கவும். வளைவான கைப்பிடி கிடைக்கும். அதன் ஒரு முனையில் இரண்டு pockets இருக்கும், அந்த இடத்தில் ஒரு ப்ரவுன் முக்கோணத்தை இணைக்கவும்.

இப்பொழுது கூடையைத் திருப்பி, அதன் அடிப்பக்கத்தில் 18 பிங்க் நிற முக்கோணங்களை தலைகீழாக (inverted) செருகிவிடவும். இது கூடையின் கீழ்ப்புறம் காலியாக இல்லாமல் இருப்பதற்காக செய்வது.

கூடையின் மேல் கைப்பிடியை இணைக்கவும். ஒரு புறம் ஒற்றை முக்கோணத்தை இணைக்கமுடியும், அடுத்த பகுதில் கூர்மையான இரண்டு முக்கோணங்களை இணைக்கமுடியும்.

கலர்ஃபுல் பூக்கூடை தயாராகிவிட்டது.

என்னால் முடிந்தளவு, எனக்குப் புரிந்தமாதிரி விளக்கம் கொடுத்திருக்கிறேன். இந்தக் கூடை யூட்யூப் வீடியோ பார்த்து செய்தது. கலர் பேப்பர்கள் என்னிடம் இருந்த காம்பினேஷனில் செய்திருக்கிறேன். வீடியோவில் தெளிவான விளக்கம் இருக்கிறது. அதனைப் பார்த்து செய்ய ஆரம்பித்தால் சுலபமாக இருக்கும். குட் லக்! :)



பின்குறிப்பு
ஊருக்குச் செல்வதால் இன்னும் சிலகாலத்துக்கு வலையுலகிற்கு வழக்கம்போல வர இயலாது. அதுவரை இங்கு பதிவுகள் வந்தாலும் வரலாம், வராமலும் இருக்கலாம். அப்பப்ப எட்டிப் பார்த்து கன்ஃபர்ம் பண்ணிக்கோங்க! ;)

என் தொந்தரவு இல்லாமல் எல்லாரும் கொஞ்சநாள் சுதந்திரமா இருங்க! :) மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்!

25 comments:

  1. மிக அழகாக இருக்கு பூக்கூடை. அழகாக,தெளிவாக புரியவைத்திருக்கிறீங்க.
    இம்முறை சரியா செய்யவேணும் என நினைத்திருக்கிறேன்.
    உங்க பயணம் நல்லபடியாக அமைவதற்கு என் வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும். HAPPY JOURNEY

    ReplyDelete
  2. ரொம்ப அழகான பூக்கூடை. படங்களும் விளக்கமும் தெளிவா இருக்கு. செய்து பாத்துட வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. ரொம்ப தெளிவாக விளக்கி இருக்கீங்க மகி

    ReplyDelete
  4. Real multitalented gal u r Mahi !
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  5. கூடை அழகு
    கூடைக் கைபிடி அழகு
    பிடிக்கும் கை கூட அழகு.

    பின்தொடரும் எல்லோரும் பார்த்துக்கங்க... வளையம் எப்பிடிப் பிடிக்கிறாங்க என்கிறதை... அழகா நெய்ல் பாலிஷ் பூசி, ஸ்டைலா பிடிக்கணும். ;)))

    இப்பிடி கூடை செய்தால்.... செல்ஃபோன், ஹெட்ஃபோன் எல்லாம் வைக்கலாம் போல இருக்கே!! ;)

    தங்கள் விடுமுறை இனிமையாக அமையட்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பி.கு
    எனக்கு தபால்தலை சேர்த்துட்டு வாங்க மகி.

    ReplyDelete
  6. மிகச்சிறந்த அருமையான அழகான படைப்பு.
    செய்முறை விளக்கங்களும் வெகு அருமை.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் vgk

    ReplyDelete
  7. எல்லாமே அழகோ அழகு மகி ..கலர் காம்பினேஷன் மிக அற்புதம்
    நேற்றுதான் உங்களுக்கின்னே ஹலோ கிட்டி செய்முறை வீடியோ எடுத்தேன் ..நீங்க ஊருக்கு சென்று வாங்க வந்ததும் பூஸ் ஒன்னு செய்யலாம் ..டேக் கேர்

    ReplyDelete
  8. அருமையாக செய்து காட்டியிருக்கீங்க மகி.

    ReplyDelete
  9. அழகாக இருக்குங்க...
    படத்துடன் விளக்கம் அருமை...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி…


    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete
  10. படத்துடன் மிக தெளிவா சொல்லியிருக்கிங்க.
    என்ன இந்தியா பயணமா? நல்லபாடியா போயி எஞ்ஞாய் செய்திட்டு வாங்க மகி.

    ReplyDelete
  11. HAPPY JOURNEY...படத்துடன் விளக்கம் அருமை...

    ReplyDelete
  12. If this post was in English, my daughter wud be reading it, she loves origami, vera enna enna thiramai ulle olichu vachirikkinga Mahi..

    ReplyDelete
  13. நீங்க ஊருக்குப்போய்ட்டு,ஜாலியா எஞ்ஜாய் பன்னிட்டு, நலமுடன்,மெதுவா வாங்க.பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.பூக்கூடை சூப்பரோ சூப்பர்.அதற்கான செய்முறை விளக்கமும் வழக்கம்போல அருமை.

    ReplyDelete
  14. வாவ் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு... பார்த்து செய்ய முயற்சி செய்கிறேன். நல்லபடியாக ஊர் போய்வாருங்கள்

    ReplyDelete
  15. எல்லாம் ரொம்ப லட்சணமாக இருக்கு. நல்லபடி இந்தியப் பிரயாணம் அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. ஆஹா சூப்பர் மகி.

    விடுமுறையை இனிதே கழிச்சுக்கொண்டு வாங்கோ.

    ஊ.கு:
    அப்பாடா கொஞ்ச நாளாளைக்கு மழை விட்டிருக்கு சாமீஈஈஈஈஈஈஈஈ:))

    ReplyDelete
  17. //அப்பாடா கொஞ்ச நாளாளைக்கு மழை விட்டிருக்கு சாமீஈஈஈஈஈஈஈஈ:))//

    :))():))

    ReplyDelete
  18. //அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! :) //

    என்னதூஊஊ இந்தியாவுக்கு சுதந்திரம் குடுத்துட்டாங்களா..??? எப்போ .? :-)))

    ReplyDelete
  19. அழகா இருக்கு . வெல்கம் பேக்க்க்க் அப்போ திரும்ப வரும் போது நிறைய மேட்டர் இருக்கும் :-)))

    ReplyDelete
  20. கருத்துக்கள் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!

    மழை விட்டாலும் தூவானம் விடாது...அப்பப்ப இப்படி எட்டிப் பார்ப்பேன். :)

    ReplyDelete
  21. This is such a lovely post dear..:)) truly blessed with artistic hands..
    Reva

    ReplyDelete
  22. அன்பின் மகி - பூக்கூடை சூப்பர் -படிப்பதும் பார்ப்பதும் வெகு எளீதாக இருந்தது - செய்வதென்பது நிச்சயம் மிகக் கடினமாக இருக்கும். தகவல் பகிர்வினிற்கு நன்றி - திறமையும் பொறுமையும் உள்ளவரகள் முயலட்டும்- வெற்றி பெறட்டும் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  23. நல்லாயிருக்கே மகி .கெட்டிக்காரி இப்போ கூடை இருக்கோ???

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails