Tuesday, March 18, 2014

தொட்டிச் செடிகள்..

வீடு மாறியதிலும் குளிர்காலத்திலும் தொட்டிச்செடிகள் சொல்லிக்கொள்கிற அளவுக்கு செய்திகள் ஏதும் தரவில்லை. ஆனாலும் சும்மா விடமுடியுமா?- என்று அதையுமிதையும் சொல்லி(உங்களைக்)கொ(ல்)ள வேண்டி ஒரு பதிவு! :) 

இந்த வீட்டுக்கு வந்த பிறகு முதல் பூ மேலே உள்ள மஞ்சள் ரோஜா! எல்லாச் செடிகளும் அமைதியாக இருக்க, இந்த அம்மிணி:) மட்டும் ஒரே ஒரு மொட்டு விட்டு அழகாகப் பூத்துச் சிரித்தாள் புத்தாண்டில்! மற்ற ரோஜாக்கள் எல்லாம் இப்போதுதான் துளிர்விட ஆரம்பித்திருக்கின்றன. 
~~~
ஒரு முறை காய்கறி கடையில் வெங்காயத்தாள் எடுத்துக்கொண்டிருந்தேன்.  ஒரு அமெரிக்கப் பெண்மணி சினேகமான குரலில் சொன்னார், "இவற்றை நட்டு வைத்து வளர்ப்பதற்காகவும் நான் வாங்குகிறேன்!" என்று! ஆஹா என்று நானும் 2 கட்டு வாங்கிவந்தேன். எப்போதும் வெங்காயத்தாள் வாங்கினால், வேர்ப்பகுதியை நீக்கி, குப்பையில் போட்டுவிட்டு, சமைத்துவிடுவது வழக்கம்.  இந்த முறை கவனமாக வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதியை நறுக்கி..
வராது..எதற்கும் நட்டுப்பார்ப்போமே என்று காலியாயிருந்த சில தொட்டிகளில் செருகி (கவனிக்க, நட்டு வைக்கக் கூட இல்லை..சும்மா பேருக்கு போட்டு விட்டேன்!!) வைத்தேன். மறந்தும் விட்டேன்..சில நாட்கள் கழித்து எதேச்சையாகத் தொட்டிகளைப் பார்க்க...
வெங்காயங்கள் அழகாகத் துளிர்விட்டு வந்துகொண்டிருந்தன!! :))) 
நட்டு வைத்த தொட்டிகளில் வெங்காயத்தாள்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. இன்னும் பறிக்கவில்லை..பறித்தபிறகு மீண்டும் ஒரு பதிவைப் பகிர்கிறேன். 

அடுத்து வருவது ஆரஞ்சு! கீழே குடியிருந்த வீட்டம்மா எலுமிச்சை-ஆரஞ்சு என இரண்டு மரங்களை எங்களை நம்பி விட்டுப் போய்விட்டார்..மரங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரளவு பெரிய தொட்டிகள் வேணும் என என்னவர் நான் ஏற்கனவே தயார் செய்திருந்த தொட்டிகளை எல்லாம் மாற்றி, மரங்களுக்கு இடமளித்தார். கடந்த ஓரிரு மாதங்களாகவே ஆரஞ்சு மரத்தில் மொட்டுக்கள் கட்ட ஆரம்பித்தன. மிக மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த மொட்டுக்கள் மலர ஆரம்பித்தபின் ஒரே வேகம்தான்! 
கம்மென்ற சுகந்த மணத்துடன் ஆரஞ்சுப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. காற்றடிக்கையில் சுற்றிலும் நாலைந்து அடிகள் தொலைவுக்கு மணம் கமழ்கிறது இப்பூக்கள்! மரம் இன்னும் செடியாக இருப்பதால் பிஞ்சுகள் நிற்கவில்லை..பிஞ்சு பிடித்துப் பிடித்துப் பூக்கள் உதிர்ந்துபோகின்றன. சரி விட்டுப் பிடிப்போம்! :) 
மரங்களுக்காக தொட்டிகள் மாறியதில், அவற்றில் நிரப்பப்பட்டிருந்த மண்ணும், அதில் நான் நட்டிருந்த கேரட் விதைகளும் அங்குமிங்குமாக இடம் மாறிப் போயின.. இந்த வீட்டுக்கு வந்ததும் பார்க்கிறேன், பூக்கள் வளர்க்கும் தொட்டியில் சில கேரட்டுகள் வளர்ந்துகொண்டிருப்பதை!!
3 மாதங்களுக்கும் மேலாக கேரட்டுகள் வளர்ந்துகொண்டேஏஏஏ இருக்கின்றன. இந்த வசந்தத்துக்கு மலர்ச்செடிகள் வாங்கிவந்த பின்னர்தான் தொட்டிச் செடிகளுக்கு மராமத்து வேலைகள் நடக்கும் என்ற சாக்குச் சொல்லிக்கொண்டு நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கேன். சீக்கிரம் எங்க வீட்டுக்கு வசந்தம் வர வாழ்த்துங்கோ!! ;) 
வாடையில் வாடிக்கிடந்த செவ்வந்திப் பூவக்கா..
திடீரென பளீரென மலர்ந்து சிரிக்கிறாள்! 
~~~
Geno: I buried my coconut macroon in this pot. Mommy is angry at me as I broke one of the onion plants!! ;)) She didn't say anything because she was holding my lil Sister Laya! Yay..having a sis is a bliss!!  :D

10 comments:

  1. புதினா, காரட், வெங்காயத் தாள், செவ்வந்தி பூ அனைத்தும் அருமை.

    வெங்காயத் தாளின் வேர்ப் பகுதியை நட்டுவைத்தால் தளிர்க்கும் என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். இனிமேல் நட்டு வைத்து விட வேண்டியது தான். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
  2. வசந்தம் வந்து மலர வாழ்த்துகள்....!

    ReplyDelete
  3. ஒவ்வொன்றும் என்ன அழகு...!

    இதனால் கிடைக்கும் சந்தோசமே தனி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தொட்டி செடி கொள்ளை அழகு... தொட்டி ஆரஞ்ச் பூக்க ஆரம்பிடுத்தா... நானும் தொட்டியில் எலுமிச்சை வைத்திருக்கிறேன்.. 3 வருட செடி.. போன்சாய் மரத்துக்கு முயன்று அப்படியே உள்ளது. தொட்டி செடி பதிவு க்கு படம் எடுத்து வைத்திருக்கிறேன். இன்றுதான் 7 பூசணி வந்தது.. அதையும் படம் எடுத்துவிட்டு பதிவை போடனும். மகியோட பதிவை பார்த்து நான் போட்ட தொட்டி செடி புதினா பசுமை யோட அழகா வருது. ஜீனோ மெலிவா தெரியறார்.

    ReplyDelete
  5. டஃபடில் போல பூத்திருக்கு அந்த ரோஜா. பார்ததே இல்லை இத்தனை நேர்த்தியாக ஒரு ரோஜாப்பூ.

    வெங்காயத்தாள் மட்டுமல்ல, லீக்ஸ் கூட இப்படி வரும். நட்டுப் பாருங்கள். பூத்தால் / நடுவில் பூத் தண்டு தெரிந்தால் பிறகு வைப்பது பலனில்லை.

    இங்கே விடுமுறையில் சென்று இடையில் கவனிப்பு இல்லாது போனதால் நெருக்கியடித்துக் கொண்டு குட்டி குண்டு காரட்களாக முதிர ஆரம்பிக்க இடை இடையில் பிடுங்கி ட்ரிக்ஸிக்க்குக் கொடுக்கிறேன். இன்னும் மீதி இருக்கிறது.

    ReplyDelete
  6. அழகான மஞ்சள் ரோஜா. அழகான பதிவு. எல்லாமே நன்றாக வரும்.எனக்கும் இப்பத்தான் வருகிறார்கள். வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  7. முதல் பூ அழகோ அழகு! வண்ணம் கண்ணைக் கவருகிறது.

    ReplyDelete
  8. வெள்ளைப் பூ அழகு.
    ஜீனோ போல சின்னவர் ஒருவர் எங்களுக்கு அயலவராக வந்து சேர்ந்திருக்கிறார். வேலி இடுக்கு வழியே பேசிக் கொள்கிறோம். ;))

    ReplyDelete

  9. ரோஜா அழகான நிறத்தில் அழகா பூத்திருக்கு. இப்போதான் ஆரஞ்சு இல்லாத ஆரஞ்சு செடியைப் பார்க்கிறேன். காய்ச்சதும் உலா வர விடுங்க. தோட்டத்த நல்லா கவனிக்கிறார்னு பார்த்தால் செடிய ஒடச்சிட்டுதான் நிக்கிறாரா !

    வெங்காயத்தாள் முளை விட்டுள்ளதைப் பார்த்தால் காதுல புகை குபுக்குபுக்னு வருது. இந்த வாரம் நாங்களும் நட்டு வச்சிடுவோமில்ல! தோட்டத்து வசந்தம் சூப்பரா இருக்கு மகி.

    ReplyDelete
  10. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்!

    @ராதாராணி, சீக்கிரம் தோட்டப்பதிவுகளை பகிருங்க! :)

    வெங்காயத்தாள் வளர்ப்பதாகச் சொன்னவர்கள் எல்லாம் வளர்த்தீங்களா? அறுவடை செய்ததும் அப்டேட் குடுங்க! :) நன்றி!

    @இமா, நாங்க லீக்ஸ் வாங்கியதே இல்லை! அவ்வ்வ்வ்வ்! ;)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails