Friday, May 20, 2016

மொச்சைக் கொட்டை குழம்பு / Field Beans Kuzhambu

மழை விட்டும் தூவானம் விடாத கதையாக அவரைக்காய்.... தொடர்கிறது. :))) 
முற்றிய காய்களாகப் பொறுக்கி வந்து, உரித்து கர்நாடகா ஸ்டைல்ல குழம்பு வைப்போம் என மனக்கோட்டையுடன் வாங்கிவந்தேன். உரிச்சு, தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊறவத்த பிறகு, அடுத்த ஸ்டெப்புக்கு போவோம் என அடுத்த லேயர் தோலை உரிக்கப் பாத்தா....ஊஹூம்!! கை நகம்தான் வலிக்குதே தவிர வேற ஏதும் நடக்கலை!!! வெறுத்து போய் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் குக்கரில் போட்டு வேகவைத்து எங்கூட்டு ஸ்டைல்ல குழம்பு வச்சேன், சூப்பரா இருந்துச்சு! ஒய் டோண்ட் யு டிரை??! ;) :) 


போன பாராவில் சொன்ன விஷயங்களுக்கு டெமோ, மேலே உள்ள கொலாஜ்!! ஹிஹி...!! :) சரி, இனி குழம்பு வைக்கப்போலாம் வாங்க!

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை - கொஞ்சம்
பூண்டு - நாலைந்து பற்கள்
தக்காளி -2
உருளைக்கிழங்கு (சிறியதாக) -1
புளிக்கரைசல் -கால் கப்
கடுகு - 1/2டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை 
வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும். பூண்டையும் உரித்து நறுக்கவும். உருளைக் கிழங்கை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டுவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து , கடுகு தாளித்து மேற்சொன்னவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் வேகவைத்த மொச்சை, நீளவாக்கில் நறுக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
தேங்காயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துவைக்கவும். கிழங்கு வெந்தவுடன் தேங்காய் அரைத்ததைச் சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அரை டீஸ்பூன் சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து இறக்கவும். 
இந்தக் குழம்பிற்கு நான் உபயோகித்த சாம்பார்பொடி! :) 
ஊரிலிருந்து மொத்தமாக சாம்பார்ப் பொடி, ரசப்பொடிகள் வாங்கி வந்து ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்துகொள்வேன். சமீபத்தில் சாம்பார் பொடி மட்டிலும் காலியாகிவிட்டது. கலிஃபோர்னியாவில் இந்தப்பக்கம் இன்னும் தென்னிந்திய மசாலாப்பொடிகள் அதிகம் வருவதில்லை. சக்தி மசாலாவின் சில பொடிகளும், ஆச்சி மசாலாவும் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. சக்தி சாம்பார் பௌடர் கிடைக்காததால் ஆச்சி வந்துட்டாங்க. சுவை நன்றாக இருக்கிறது. :))) 

8 comments:

  1. பல்பு வாங்கிட்டு எங்களையும் ட்ரை பண்ண சொல்றீங்க.. ம்கூம்
    இதை அரைச்சு வடை சுடுவாங்களே அக்கா?
    ஒரு முறை ட்ரை பண்றேன்.. நல்லாயிருக்கு..

    ReplyDelete
    Replies
    1. பல்பெல்லாம் வாங்கல அபி! குழம்பு சூப்பரா இருந்துச்சு. :) இந்த பருப்புல வடையா?? இப்பதான் கேள்விப்படறேன் அபி! கர்நாடகாவில "பிதுக்கு பருப்பு" அப்படினு சொல்வாங்க, படத்தில் இருக்க மொச்சையின் மேல் தோலை எடுத்துட்டு செய்யறது..நீ அதையும் கூட டிரை பண்ணலாம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  2. படத்தில் இருப்பதுதான் மொச்சை கொட்டையா?
    இதுவரை எனக்குத் தெரியாது.
    செய்முறை விளக்கம் அருமையாக
    சொல்லிருக்கீங்க...
    மொச்சை கொட்டை எங்கள் ஊரில்
    கிடைத்தால் செய்து பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அஜய். ஆமாம், படத்தில் இருப்பதுதான் மொச்சை. செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி! :)

      Delete
  3. எனக்கும் அதே டவுட் தான் படத்தில் இருப்பது மொச்சைக்கொட்டையா. அப்ப அவரை??
    இப்படி குழம்பு வைத்ததில்லை. ரெசிப்பி அருமை. கிடைத்தால் செய்துபார்க்கிறேன் மகி.
    சக்தி,ஆச்சி சாம்பார்பொடி உட்பட எல்லாப்பொடியும் கிடைக்கிறது.

    ReplyDelete
  4. மொச்சைக்கொட்டை குழம்பு செய்முறையும் விளக்கப்படங்களும் அருமை மகி. எனது வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. முற்றிய அவரையில் இருந்துதான் மொச்சை எடுக்கறாங்களோ ! இரண்டும் தனித்தனி இல்லையோ !

    பச்சை மொச்சைதானே மகி, அப்படியே போட்டால் வேகாதா ! இனி நானும் பொறுக்கி எடுக்கப் பார்க்கிறேன் :)

    ஆச்சிப் பொடிக்கு விளம்பரமோனு நெனச்சுட்டேன் :) ஆனந்த் சாம்பார்பொடி(இந்த வாரம் கடைக்கு போய் பெயரை உறுதி செய்துகொள்ள வேண்டும், ரொம்ப நாளைக்கு முன் வாங்கினது) கெடச்சா ட்ரை பண்ணுங்க. விளம்பரமெல்லாம் இல்லை, நல்லாருக்கும், நம்புங்க.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails